“தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்” என்ற தலைப்பில் சசிக்குமார் எழுதியுள்ள இந்தப்
புத்தகம் நுண்ணுயிரிகளின் சிக்கலான உலகத்தை விளக்கும் ஓர் அரிய நூலாகும். எளிமையான
உரைநடையில், மழலையர் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் முதல் தமிழ் படிக்கத் தெரிந்த ஆனால்
முறையான துறை சார்ந்த கல்வி அறிவு இல்லாத பெரியவர்கள் வரை அனைவருக்கும் புரியும் வகையில்
விளக்கப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத்தின் தலைப்பை அடிக்கடி பல இடங்களில் நாம் கேட்டு இருப்போம். கடவுள் எல்லா இடத்திலும் இருப்பார் என்று பொருள்படும்படி இந்தச் சொற்றொடரை பலரும் உபயோகிக்கின்றனர்.
ஏன் நடக்கிறது? எதற்கு நடக்கிறது? என்ற அடிப்படை அறிவியலை அறியாத காலத்தில் தெய்வீக
தலையிட்டால் தான் இவை உருவாகின என்று நம்பப்பட்டது. உதாரணமாகப் பெரியம்மை,
சின்னம்மை போன்ற கொள்ளை நோய்கள் தாக்கிய பொழுது நாம் செய்த பாவங்களுக்குக் கடவுளின்
தண்டனைகள் தான் இவை என்று நம்பப்பட்டது. இப்பொழுது நாம் கலியுகத்தின் முடிவில் இருக்கிறோம். உலகம் அழியப் போகிறது. நாம் செய்த பாவங்களின் உச்சம்தான் சமீபத்தில் நம்மைத் தாக்கிய கொரோனா வைரஸ் என்று குற்றம் கூறிக்கொண்டு இருப்பவர்களும் இருக்கிறார்கள். ஆராய்ச்சிகளுக்குப் பிறகு தான் புரிய வந்தது, இது
போன்ற நோய்கள் நுண்ணுயிரிகளால் தான் நமக்கு வந்தது என்று. இந்த நோய்களைக் கட்டுப்படுத்த
உடனடி தேவை தெய்வீக சக்தி அல்ல தகுந்த அறிவியல் கண்டுபிடிப்பு.
Be the first to rate this book.