தமிழ் சினிமாவில் இயக்குநராகும் கனவுடன் வலம் வருவோருக்கான கையேடு இது.
பல உதவி இயக்குநர்களின் வாழ்வனுபவ சாரமே இந்நூலின் பலம். உதவி இயக்குநர்களாகப் பணியாற்றும் காலத்தில் என்னென்ன தெரிந்துகொள்ள வேண்டும், எம்மாதிரி தருணங்களில் எப்படி நடந்துகொள்ள வேண்டும், ஒரு வாய்ப்பை எப்படி வெற்றிகரமான முதலீடாக்க வேண்டும் என்று இந்நூல் கற்றுத் தருகிறது.
ராஜேஷ் பச்சையப்பன், தமிழ்த் திரை உலகில் பணியாற்றுபவர். தம் அனுபவங்களையும் தமது நண்பர்களின் அனுபவங்களையும், கற்ற கலையுடன் கலந்து எழுதியிருக்கிறார். மெட்ராஸ் பேப்பர் இணைய வார இதழில் இது தொடராக வெளிவந்தது.
Be the first to rate this book.