மக்களுக்கு உணவு, கல்வி, சுகாதாரம்' தனது அடிப்படை நோக்கம் எனக் கூறிய சங்கரா, நவகாலனிய எதிர்ப்பு, நிறவெறி எதிர்ப்பு, சமூகநீதி, பெண் விடுதலை, மொழி உரிமை, வளர்ந்த நாடுகளின் கடனை திருப்பி செலுத்த கூடாது என்ற கோசம், ஏகாதிபத்தியங்கள் இயற்கையை சுரண்டுகின்றன அதை பாதுகாக்க வேண்டும் என்ற குரல், உலகில் ஒடுக்கப்படும் மக்களின் குரல்களுக்கு குரல் கொடுக்க வேண்டும் என்ற தைரியம், ஃபிரான்ஸ், அமெரிக்கா, இங்கிலாந்து என விடுதலைக்கு ஏகாதிபத்தியங்கள் காலில் விழாமல் மக்கள் போராடினால் ஏகாதிபத்தியங்கள் நடுநடுங்கும் என்ற கோசம், அமெரிக்காவில் நடந்த கூட்டத்தில் துப்பாக்கியைத் தூக்கி “ஏகாதிபத்தியங்களே நாங்கள் தயார்” என்ற துணிவு, மக்கள் தனி, அரசு தனி, போராட்டம் தனி என இருக்காமல், மக்கள் தான் அரசு, மக்கள் தான் போராட்டம், அனைத்து அதிகாரமும் மக்களிடம் இருக்க வேண்டும் என்று கூறியவர் - ஆப்ரிக்காவின் 'சேகுவேரா' தாமஸ் சங்காரா.
ஆப்ரிகாவில் எழுந்த இந்த குரலைக் கண்ட ஏகாதிபத்தியங்கள் நடு நடுங்கத் தான் செய்தன. அக்டோபர் 9 ‘சே’ நினைவு நாளில் “ உங்களால் புரட்சியாளர்களை கொல்ல முடியும், அவர்களின் கருத்துக்களை கொல்ல முடியாது” என்று ஓங்கி முழங்கிய புரட்சியாளர் தாமஸ் சங்காரா, அன்றில் இருந்து 6 நாட்கள் கழித்து இன்று கொல்லப்பட்டு 33 வருடங்கள் முடிவடைகின்றது. அவரின் கருத்துக்களை கொல்ல முடியாது என்பதற்கு சாட்சியாக, அதிகாரத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்திற்கும், தேசிய விடுதலைக்கும் பெரும் படிப்பினையாக இருக்க 'தமிழில்' சிந்தன் புக்ஸ் வெளியீடாக வருகிறார்
Be the first to rate this book.