நூலிலுள்ள தகவல்களும் சான்றுகளும் பலகோணங்களில் ஆராய்வதற்கான புதிய பல கேள்விகளை எழுப்புகின்றன. ஆய்வு நூலின் ஒவ்வொரு இயலிலும் அதைச்சார்ந்த ஆய்வுக்கான களங்கள் திறந்திருக்கின்றன.
பதியப்பட்டிருக்கும் இந்திய வரலாற்றில் பெரிதும் பேசப்படாத தமிழகத் தொல்குடி மக்களின் வரலாற்றின் மீது சான்றொளி வீசிக் காட்டுகின்ற அதேவேளையில் அம்மக்களின் உறுதியான, நிலையான அரசியல், வாழ்வியல் வரலாற்று வளர்ச்சியினை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது.
தமிழ்குடிகளின் சுவடுகளைத் தேடுபவர்களுக்கும், வரலாற்று ஆர்வலர்களுக்கும், எஞ்சியிருக்கும் தமிழ் தொல்குடிகளின் நினைவுச் சிண்ணங்களை அறிந்துகொள்ள எண்ணுபவர்களுக்கும் இந்நூல் ஓர் சங்ககால தொல்லியல் சான்றுகளின் குவியல் எனக் கூறினாலும் மிகையானதன்று.
Be the first to rate this book.