சமுதாய அமைப்பு என்பது நாடோடி சமுதாயம், கால்நடை வளர்ப்பு சமுதாயம், வேளாண்மை சமுதாயம், அரசு உருவாக்கம் என்றப் படிநிலைகளைக் கொண்டது. இனக்குழு சமுதாயத்தில் ஒரு இனக்குழு மற்ற இனக்குழுக்களுடன் பண்பாட்டுத் தொடர்புக் கொண்டு நாகரிக வாழ்க்கையை நோக்கி வளர்ந்தன. சில இனக்குழுகள் பிற இனக்குழுக்களுடன் தொடர்பு இல்லாமல் தங்களுடைய பண்பாட்டுக் கூறுகளை அவர்களே வகுத்துக் கொண்டு வாழ்ந்தன. இரண்டாவது இனக்குழு சமுதாயத்திற்கு உதாரணமாக இருப்பது குறுமன்ஸ் பழங்குடி சமுதாயம். கால்நடைகளே அவர்களுடைய சொத்தாக இருந்ததால் அதை அடிப்படையாகக் கொண்டு அச்சமுதாயம் வளர்ந்தது. தாய்வழி சமுதாயம், மூதாதையர் வழிபாடு, குலமுறை சமுதாயம்ஆகியன இச்சமுதாயத்தில் குறிப்பிடத்தக்கன. காலப்போக்கில் அரசர்களின் ஆதிக்கத்தாலும், சமயங்களின் வளர்ச்சியாலும் இவர்களுடைய சமுதாயத்திலும் பல மாற்றங்கள் உருவாயிற்று. இதனால் மூதாதையர் வழிபாட்டுடன் வீரபத்திசாமி வழிபாடு உருவாக்கப்பட்டது. இருப்பினும் தாய்வழி சமுதாயம், மூதாதையர் வழிபாடு, குலக்குறி வழிபாடு, நிர்வாக அமைப்பு ஆகியவற்றில் வேறுபட்டு காணப்படுகின்றது என்பதை இந்நூல் ஆய்வு செய்கின்றது.
Be the first to rate this book.