தமிழ்மொழியின் இலக்கியப் பரப்பு என்பது இந்துமாக்கடலைவிடவும் பெரியது எனலாம். தமிழ் மொழியில் கிடைக்கப் பெற்றுள்ள முதல் நூலாகிய தொல்காப்பியம் முதற்கொண்டு இன்றைய படைப்புகள் வரை நினைத்துப் பார்த்தாலே நெஞ்சம் விம்மி பொலிகிறது. அவற்றை எண்ணிப் பார்த்தால் இயலாதாகையின் எல்லை கட்டி நினைவுகூர்தல் இயலும். அந்தவகையில் அமைந்துள்ள நூலாக இருப்பது தான் தொல்காப்பியர் முதல் வைரமுத்து வரை என்னும் இந்த நூல். அவ்வப்போது ஆய்வுக்கு உட்படுத்திய இலக்கியங்கள் பற்றிய 22 கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு நூல். ஒரு நூலை ஏதேனும் ஒரு கோணத்தில் ஆராய்தல், ஒரு நூலைப் பலகோணங்களில் ஆராய்தல் என்னும் போக்கில் இந்தக் கட்டுரைகள் அமைந்துள்ளன.
தொல்காப்பியர் தொடங்கி இன்றைய வைரமுத்து உட்பட பலரை அடையாளங்காட்டியிருக்கின்றனர்.
Be the first to rate this book.