சொற்களுக்கான பொருள்களை அறிந்து கொள்வதில்தான் படைப்பிற்கான வளர்ச்சி அடங்கியிருக்கிறது. தொல்காப்பியர் காலம் தொட்டு தமிழ் இலக்கிய உலகம் சந்தித்திருக்கிற சொற்களை இந்நூலாசிரியர் கலைச்சொற்களாகப் பயன்படுத்தி எழுதியிருக்கிறார். இது தற்கால வாசகர்களுக்கு, இன்மையைத் தேடி ஓடுவதைப் போன்றதொரு சூழலை உருவாக்கிச் சென்றிருக்கிறது. இதுவே இக்கவிதை நூலின் வெற்றி.
மரபையும் நவீனத்தையும் இணைக்கிற ஓர் உத்தியை இந்நூல் செய்திருக்கிறது. பெண்களுக்கு இதுவரை சொல்லப்பட்ட இலக்கணங் களையும் கட்டுப்பாடுகளையும் கேள்விக்குட்படுத்துகிற, விமர்சிக்கிற, சமூக அவலங்களுக்குக் குரல் கொடுக்கிற ஒருவராகத் தொல்காப்பியப் பெயர்த்தி இருக்கிறார்.
தமிழ் இலக்கண, இலக்கியத் துறை சார்ந்த அறிவோடு தற்கால எழுத்து உத்திகளையும் பின்பற்றி வெளிவரும் இந்நூல் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
Be the first to rate this book.