'தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை' என்ற இந்தப் பெரிய நூலை ஆக்கித் தந்துள்ளார். இதில் தமிழ் மக்களின் அறிவுக்கருவூலமாக நின்று நிலவும் தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் ஒன்பது இயல்களும் 33 கட்டுரைகளாகப் பாகுபடுத்தப்பெற்று விளக்கம் பெறுகின்றன. இறுதியிலுள்ள 34 ஆவது கட்டுரை, நூலிலுள்ள கட்டுரைகளின் கருத்துகளைத் தொகுத்துக் கூறுகின்றது; அக்கட்டுரையின் தலைப்பே நூலின் பெயராகவும் அமைந்துள்ளது; அவ்வியல்களில் அடங்கியுள்ள கருத்துகள் எவர் மனத்தையும் எளிதில் பிணிக்கும் வண்ணம் எளிய முறையில் புதிய தலைப்புகளில் புதுக்கோலம் பூண்டுத் திகழ்கின்றன. தமிழ் இலக்கிய மரபுகளை நன்கு அறிந்துகொண்டு தமிழ் இலக்கியங்களை - சிறப்பாகச் சங்க இலக்கியங்களை - சுவைக்க விரும்புவார்க்கு இக்கட்டுரைகள் பெருந்துணை புரியும் என்பதற்கு ஐயம் இல்லை. தொல்காப்பியப் பொருளதிகாரம் பயில்வார்க்கு இந்நூல் ஒரு வழித்துணை விளக்கம் போலவும் அமையும்.
Be the first to rate this book.