2016க்குப் பிறகு ராஜன் ஆத்தியப்பன் எழுதிய கவிதைகளின் தொகுப்பு இந்நூல். கவிதை எனும் காட்டு விலங்கிடம் தன்னை ஒப்புக்கொடுக்க விரும்பும் இவருடைய கவிதைகள் மொழியாலும் வடிவத்தாலும் கூர்மையான ஆயுதமாகின்றன. சவரக் கடையின் இருக்கையில் சிந்திய மயிர்க்கொத்து காலத்தின் வரிவடிவமாகிறது. செம்பழுத்த பரிதி சேவலின் வாயில் வட்டம் வரைகிறது. உளிக்குழிகளின் நேற்றைய பாசி வழுவழுப்பாக நினைவுகள் எஞ்சுகின்றன. பிராணிகளும் பறவைகளும் தெய்வங்களின் சொற்களாய் அலைந்து இறுதியில் கவிதையாகின்றன. இது இவருடைய மூன்றாவது கவிதைத் தொகுப்பு.
Be the first to rate this book.