வாசுதேவனுக்குத் தத்துவப் பரிச்சயம் இருப்பதனால் தர்க்கமும் அவர் கவிதைகளில் இயல்பாக அமைகின்றது. தனது பதினேழு வயதில் ஊரை விட்டும், இரு பத்தியிரண்டு வயதில் நாட்டை விட்டும் புறப்படும் கவிஞன் தன் அலைதலுக்கூடான வாழ்வனுபவங்களை ஒரு தேர்ந்தெடுத்த மொழியூடாக வெளிப்படுத்துகிறான். இந்த மொழி பிரெஞ்சு இலக்கியச் செழுமையைக் கவிஞன் உள்வாங்கியதன் ஊடாக உருப்பெற்றிருக்க வேண்டும்.
Be the first to rate this book.