பா. ராகவனின் இக்கட்டுரைகள் இன்றைய காலக்கட்டத்தின் பல நுட்பமான பிரச்னைகளைத் தொட்டுப் பேசுகின்றன. சுற்றி வளைக்காமல் மிக நேரடியாகக் கொதிநிலையை அணுகப் பார்க்கின்றன. ஆனால் எது ஒன்றையுமே அவர் தன் அனுபவத் தொடர்பின்றிப் பேசுவதில்லை. தனது சறுக்கல்களையும் அவமானங்களையும் ஏற்பட்ட சேதாரங்களையும் அப்பட்டமாக வெளிப்படுத்த வெட்கப்படுவதும் இல்லை. முப்பதாண்டுகளாக எழுத்துத் துறையில் தீவிரமாக இயங்கி வரும் பாரா, இன்றைய தலைமுறை வாசகர்களையும் ஈர்த்துத் தன்னருகே இருத்தி வைத்துக்கொண்டிருக்கும் காரணம் இதுதான். பா. ராகவனின் பதிமூன்று நாவல்கள், ஆறு சிறுகதைத் தொகுதிகள், ஐம்பதுக்கும் மேற்பட்ட அபுனைவு நூல்கள் இதுவரை வெளியாகியிருக்கின்றன. தமது படைப்பிலக்கியப் பங்களிப்புகளுக்காக பாரதீய பாஷா பரிஷத் விருது பெற்றவர்.
Be the first to rate this book.