அன்பின் வழிமுறைகள் ஏன் இத்தனை பதட்டமுடையதாக இருக்க வேண்டும்? அதில் ஏன் துடைத்துத்தீராத கண்ணீர் துளிகள் துளிர்த்தவண்ணம் இருக்க வேண்டும்? காதலின் அனல்மூச்சுகளில் நம் இதயத்தின் பாறைகள் உருகும்போது பெருகும் வெள்ளத்தில் நாம் பற்றிக்கொள்ள ஒரு கிளை இல்லாமல் தவித்துபோகிறோம்.
இதோ இந்த வரிகளை எழுதுகிறவனைப்போலவே நேசத்தின் புதிர்களை அவிழ்க்க முயற்சிகளில் மேலும் புதிய முடிச்சுகளை போடுபவராக நீங்களும் இருக்கக் கூடும்.
பிரியத்தில் நெகிழும் கணங்களை தீண்டும் இக்கவிதைகள் மனுஷ்ய புத்திரனால் 2016ல் எழுதப்பட்டவை. மனுஷ்ய புத்திரனின் புகழ்பெற்ற கவிதையான ‘கிளிக்காவியம்’ மற்றும் ‘வாணி ஸ்ரீ’ கவிதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.
Be the first to rate this book.