'திருவள்ளுவர் அரசு' என்னும் புத்தகத்தைப் படித்துப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன். இனிய தெள்ளிய தமிழ் நடையில் திரு. மதுரை முதலியார் இந்நூலினை இயற்றியுள்ளார். நூலில் இவரது ஆராய்ச்சித் திறமையும் பன்னூற் பயிற்சியும் புலப்படுகின்றன. புறநானூறு, திரிகடுகம், நான்மணிக்கடிகை, பழமொழி நானூறு, திரிகடும், நான்மணிக்கடிகை, பழமொழி நானூறு போன்ற பழைய இலக்கிய நூல்களிலிருந்து மேற்கோள்கள் எடுத்துக்காட்டித் திருவள்ளுவர் கருத்துகளைச் செவ்விதின் விளக்கியுள்ளார். சிலப்பதிகாரம், சிந்தாமணி, மணிமேகலை, கம்ப ராமாயணம் முதிலய பெருங் காப்பியங்களிலிருந்து ஆங்காங்கு இவர் எடுத்துத் தந்துள்ள மேற்கோட்ட பகுதிகள் நூலினை அணி செய்கின்றன. இடையிடையே சில கதைகள் வழியாகவும் திருவள்ளுவருடைய கருத்துகளை இவர் விளக்கியுள்ளது ஒரு சிறப்பு.
Be the first to rate this book.