முஹம்மத் (ஸல்) அவர்களின் இறைத்தூதுத்துவத்தின் மீது நம்பிக்கை கொள்ளாதிருந்தால் மேலும் அக்கிரமம், கொடுமை, ஏளனம் ஆகியவற்றால் இறைத்தூதர் அவர்களின் அழைப்புப் பணியை எதிர்த்துக் கொண்டிருந்தால் அதன் விளைவு என்னவாகும் என்பதை இறைமறுப்பாளர்களான குறைஷிகளுக்கு அச்சுறுத்துவதே இந்த அத்தியாயத்தின் நோக்கமாகும். இவ்வத்தியாயத்தில் அச்சமூட்டி எச்சரிக்கும் அம்சம் மிகையாகவும் வெளிப்படையாகவும் தென்படுகிறது. இருந்தபோதிலும் இந்த அச்சுறுத்தல்களுக்கு இடையே பின்வரும் மூன்று உண்மைகளுக்கு தெளிவான ஆதாரங்களுடன் விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.
(அ) ஓரிறைக் கொள்கை
(ஆ) மறுமைக் கொள்கை
(இ) இறைத் தூதுத்துவம்
சத்தியத்தை ஏற்றுக் கொள்ளும் ஆற்றல் சிறிதளவேனும் உள்ள ஒவ்வோர் உள்ளத்தையும் நல்வழியின் பக்கம் ஈர்க்க வேண்டும் என்பதற்காக இந்த வலுவான ஆதாரங்களின் அடிப்படையில் அழுத்தமான அச்சுறுத்தல்களும் கண்டனங்களும் மீண்டும் மீண்டும் இவ்வத்தியாயத்தில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
Be the first to rate this book.