லுக்மான் அத்தியாயத்தின் ஆரம்பமாக ஞானம் செறிந்த வேதத்தின் வசனங்களான இவை நற்செயல் புரிபவர்களுக்கு வழிகாட்டி மற்றும் அருட்கொடை என்று தொடங்குகின்றது. வெற்றியாளர்கள் யார் என்பதைக் குறிப்பிடும் வசனங்களாகும் இவை.
நன்மை செய்யும் மக்களின் மூன்று முக்கிய பண்புகளாக தொழுகையை நிறைவேற்றுதல், ஜகாத்தைக் கொடுத்து வருதல், மறுமையை உறுதியாக நம்புதல் ஆகியவற்றைச் சிறப்பித்துத் தனியே கூறப்பட்டிருப்பதன் நோக்கம், மீதியுள்ள ஏனைய நற்செயல்களுக்கு இம்மூன்று பண்புகள்தாம் அடித்தளம் என்பதை அழகாக மௌலானா விளக்கியுள்ளார்கள்.
சில மனிதர்களின் தவறான பிடிவாதங்கள் எப்படிப்பட்டவை என்பதையும் அவர்களுக்கு இழிவுபடுத்தும் வேதனை உண்டு என்பதையும் நீண்ட விளக்கங்கள் மூலம் விளக்கியுள்ளார்கள்.
Be the first to rate this book.