ஃபாத்திர் அத்தியாயத்தில்…
1 முதல் 3 வரையுள்ள வசனங்களில் குறிப்பிடப்படும் இறைவனின் வல்லமை, அவன் வழங்கியிருக்கும் அருட்கொடைகள், மனிதர்கள் காட்ட வேண்டிய நன்றி என்பவற்றுக்கான விளக்கங்களை எடுத்துரைத்துள்ளார்.
ஷைத்தானின் சூழ்ச்சி, அதனால் ஏற்படும் தீங்கு, அவனது மாயவலையில் சிக்கி மனிதன் வேதனைக்குள்ளாவது என்பவற்றைக் குறிப்பிடும் வசனங்களான 4 முதல் 8 வரையுள்ளவற்றுக்கு விளக்கத்தை அளித்து நாம் எவ்வாறு அவனிடமிருந்து தப்பித்துக்கொள்ள வேண்டுமென்பதை நினைவுறுத்தியுள்ளார்.
9 முதல் 15 வரையுள்ள வசனங்களில் கூறப்படும் இறைவனின் வல்லமைகள், அவனது அற்புதமான படைப்புகள் குறித்து மிகச் சிறப்பாக விளக்கியுள்ளார்.
16 முதல் 38 வரையுள்ள வசனங்களில் அறிவிக்கப்படும் மனிதனின் சக்தி, திறமை ஆகியன ஒன்றுமில்லாதவை, அல்லாஹ் ஒருவனே எல்லா ஆற்றல்களையும் உடையவன் என்ற சத்தியத்தை நல்ல முறையில் விளக்கியுள்ளார்.
இறைவனுக்கு இணையானவர்களாக புகழப்படுபவர்களால் எதுவும் செய்ய முடியாது. அனைவருமே அவனால்தான் உண்டாக்கப்பட்டிருக்கின்றனர் என்பதைக் குறிப்பிடும் வசனங்களான 39 முதல் 45 வரையுள்ள வசனங்களுக்குத் தெளிவான விளக்கங்களை அளித்துள்ளார்.
Be the first to rate this book.