அத்தியாயம் ‘அன்னிஸா’ மனித இனத்திற்கு, பல சட்டங்களையும் ஒழுக்கங்களையும் விளக்கும் நிரந்தர சட்டமாக அமைந்திருக்கிறது. இஸ்லாமிய சமூகத்தைக் கட்டுக்கோப்புடன் செழித்தோங்கச் செய்வது எப்படி, இஸ்லாத்துக்கு முந்தைய அறியாமை வழிமுறை-களை-யெல்லாம் முழுக்க ஒழித்து விட்டு ஒழுக்கம், பண்பாடு, சமூகவியல், பொருளியல் போன்றவற்றுக்கான புதிய கொள்கைகளையும் வழிமுறைகளையும் நடைமுறைப்படுத்துவது எப்படி போன்ற வினாக்களுக்கு விளக்கங்களைத் தந்து அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கவுரை அமைந்துள்ளது.
மேலும், ‘அன்னிஸா’ அத்தியாயம் முக்கியமான அம்சங்-களான அநாதைகள் பராமரிப்பு, அவர்களின் சொத்துப் பாதுகாப்பு, பலதாரமணம், பெண்களின் சொத்துரிமை, இல்லறத்தில் ஏற்படும் பிரச்னைகள், அவற்றுக்கான தீர்வுகள், பெண்-களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள உரிமைகள், உறவினரை அரவணைத்துச் செல்லல், பாகப்பிரிவினைச் சட்டங்கள், நேர்மையான வருமானம், நாணயமான வணிகம், சிறிய பெரிய பாவங்கள் அவற்றின் தீர்வுகள், பெற்றோருக்கு ஆற்ற வேண்டிய கடமைகள் போன்றவற்றை விரிவாகக் கூறுகின்றது.
இன்னும், அரபு இணை வைப்பாளர்கள், யூதக் குலத்த-வர்கள், நயவஞ்சகர்கள் போன்றவர்களின் தீவிர எதிர்ப்புக்கு பதிலளிக்கும் விதமாகவும் அமைந்துள்ளது. இந்த எதிர்ப்புச் சக்திகளின் பகைமையையும் மீறி இஸ்லாத்தின் அழைப்பைப் பரப்புவது, புதிய நல்லுள்ளங்களை இஸ்லாத்தின் பக்கம் ஈர்ப்பது எப்படி என்பதை உணர்த்துவதாகவும் வசனங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த அனைத்து விவரங்களையும் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் இந்த விளக்கவுரை அமைந்திருக்-கின்றது. இவ்வுலகில் இன்ப வாழ்வை அனுபவித்து மறுமை-யில் வெற்றியைப் பெற விரும்புவோர் ஒரு முறைக்குப் பலமுறை படித்துச் சிந்தித்து செயற்புரிய இந்த ‘அன்னிஸா’ அத்தியாயமும் விளக்கவுரையும் உதவும் என்று நம்புகிறோம்.
Be the first to rate this book.