அல்மாயிதா’ அத்தியாயத்தில் இறைத்தூதர்கள் அனைவரும் குறிப்பாக நபி ஈஸா (அலை) அவர்களும் ஏகத்துவத்தையே போதித்தார்கள் என்பது வெகுதெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. நபி ஈஸா (அலை) அவர்கள் தமது வாழ்நாளில் போதித்ததையும், நியாயத்தீர்ப்பு நாளில் அல்லாஹ்வின் கேள்விக்கு அவர்கள் பதில் சொல்லவிருப்பதையும் இந்த அத்தியாயத்தில் அல்லாஹ் தெளிவுபடக் கூறுகிறான்.
இந்த அத்தியாயத்தில் உண்பதற்கு அனுமதிக்கப்பட்ட பிராணிகளின் விவரங்கள், வேட்டையாடுதல், சுத்தமாக இருத்தல், நீதி, நேர்மை, இறைநம்பிக்கை உள்ளவர்களுக்கு அல்லாஹ் அளித்த அருட்கொடைகள் என்பவை விளக்கப்படுகின்றன. மேலும், உலகில் நடந்த முதல் கொலை, இறந்த மனிதனைப் புதைக்கும் முறை, கொள்ளை, திருடு, உறுப்புகளைத் துண்டித்தல் ஆகிய தீயசெயல்களுக்கான தண்டனைகள், குடி, சூதாட்டம் மூலம் ஏற்படும் தீங்குகள் என்பன போன்ற பல்வேறு முக்கிய அம்சங்களைக் காணலாம்.
கிறிஸ்தவர்களின் அறியாமையைக் குறித்தும் வழிகேட்டைக் குறித்தும் அல்லாஹ் எச்சரிப்பதையும் விளக்கியுள்ளார்கள்.
Be the first to rate this book.