23வது அத்தியாயமான அல் முஃமினூன், திண்ணமாக இம்மையிலும் மறுமையிலும் வெற்றிக்கு உரியவர்கள் யார் என்கின்ற வசனத்தோடு தொடங்குகின்றது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த சத்தியத்தைப் பின்பற்றி நடக்கும்படி மக்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்புதான் இந்த அத்தியாயத்தின் மையக்கருத்தாக விளங்குகிறது.
இன்று மனிதர்கள் வெற்றி, தோல்வி என்பவற்றுக்குத் தாங்களாக வரையறுத்துள்ள அளவுகோல் தவறு, அவர்களின் கணிப்புகளும் தவறு, அவர்களின் பார்வையும் தொலைநோக்கு உடையதல்ல என்பதைக் குறிப்பிடும் விதமாக ‘திண்ணமாக இறைநம்பிக்கையாளர்கள் வெற்றி பெற்று விட்டனர்’ என்ற வசனம் அமைந்துள்ளது.
இறைவனின் ஏகத்துவத்துக்கு எடுத்துக்காட்டுகள், இறைத்தூதர்கள் நூஹ், மூஸா, ஹாரூன் (அலை) ஆகியோரின் துணிச்சலான நடவடிக்கைகள், எதிரிகளின் கண் முன்பே நபிமார்களைக் காப்பாற்றி, அக்கிரமம் புரிந்தவர்களை அல்லாஹ் எப்படி அழித்தான் என்பது, உலக அழிவு மற்றும் மறுமையைக் குறித்த செய்திகள், அழைப்புப்பணிக்கான அழகிய வழிகாட்டுதல்கள் என்று பல்வேறு விஷயங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.
Be the first to rate this book.