தா-ஸீம்-மீம். இவை தெளிவான வேதத்தின் வசனங்களாகும்’ எனத் தொடங்கும் ‘அல் கஸஸ்’ எனும் 28ஆவது அத்தியாயம் - இறைத்தூதர் நபி மூஸா (அலை) வாழ்வில் நடைபெற்ற பல நிகழ்வுகளின் வரலாற்றுத் தொகுப்பாய்த் திகழ்கிறது. மூஸா நபியின் ஆரம்ப காலகட்டம், திருமணம் என்று பல செய்திகளைத் தெரிவிப்பதாக இருக்கிறது. இதற்குரிய விளக்கங்கள் நபி மூஸா (அலை) அவர்களின் வரலாற்றைத் தெளிவாகப் புரிந்துகொள்வதற்கு உதவியாக இருக்கின்றது. இன்னும், ஃபிர்அவ்னுக்கும் மூஸா நபி (அலை) அவர்களுக்கும் இடையில் மூண்டிருந்த மோதலைப் போன்றே மக்காவிலும் நபி (ஸல்) அவர்களுக்கும் மக்கத்து இறைமறுப்பாளர்களுக்கும் இடையிலும் மோதல் மூண்டு இருந்தது என்பதைக் குறிப்பிடும் வசனங்களுக்கான விளக்கங்களும் தெளிவான புரிதலைத் தருகின்றன.
85ஆவது வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ‘உம்மை ஒரு நல்ல முடிவின் பக்கம் கொண்டு செல்வான்’ என்பதற்கு வழங்கப்படும் தவறான விளக்கங்களைப் பின்தள்ளி சரியான கருத்துக்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், ‘இது உம்முடைய இறைவனின் கிருபை(யினால் உம்மீது இறக்கியருளப் பட்டிருக்கின்றது)’ என்ற வசனத்திற்கான மிக நீண்ட விளக்கம் மூஸா (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்ட தூதுத்துவப் பொறுப்புடன் இணைத்து இங்கு விளக்கப்படுகிறது. இதன் மூலம் நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட தூதுத்துவப் பொறுப்பின் வலிமை, தாக்கம் இவற்றை உணர்த்துவதாக அமைந்துள்ளது.
Be the first to rate this book.