திருக்குர்ஆனின் 22ஆவது அத்தியாயமான அல்-ஹஜ்ஜுக்கு விளக்கவுரை அளித்துள்ள மௌலானா மௌதூதி அவர்கள், அல்லாஹ் மூன்று குழுவினரை நோக்கி கருத்துரைகளை நிகழ்த்துவதாக தெரிவிக்கிறார்கள். அவர்கள்,
1) மக்கத்து இணைவைப்போர்,
2) இறைநம்பிக்கைக்கும் இறைமறுப்புக்குமிடையில் தடுமாறும் முஸ்லிம்கள்,
3) வாய்மைமிக்க இறைநம்பிக்கையாளர்கள்
என்று வகைப்படுத்தியுள்ளார்கள். மறுமைநாளின் பூகம்பம் மாபெரும் திகிலை ஏற்படுத்துவதாக இருக்கும், அந்தக் கோபத்தின் பிடியிலிருந்து மனிதர்களே உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள் என்று தொடங்கும் இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்திற்கே மௌலானா அவர்கள் நீண்டதொரு விளக்கத்துடன் விரிவுரையை அளித்துள்ளார்கள்.
இது போன்றே பல வசனங்களுக்கு ஐயங்களுக்கிடமின்றி மிக தெளிவாகவும் குர்ஆன் எடுத்துரைக்கும் செய்தியை சரியான பார்வையுடனும் விளக்கும் விதம் மெளலானா அவர்களின் சிந்தனையாற்றலை பிரதிபலிக்கிறது.
Be the first to rate this book.