எச்சரிக்கையூட்டும் வசனங்களுடன் ஆரம்பமாகின்றது அத்தியாயம் அல்அன்பியா. தொடர்ந்து பெருமானார் (ஸல்) அவர்களின் தூதுத்துவத்தை உறுதிப்படுத்துகின்ற, நபிகளார் (ஸல்) அவர்கள் எடுத்துரைத்து வந்த தூதுத்துவம் மற்றும் மறுமை வாதங்களை விளக்குகின்ற வசனங்கள் அமைந்துள்ளன. இவைகளின் விரிவுரைகளையும் இதில் காணலாம். இன்னும், இறைத்தூதர்களின் அழகிய வரலாறுகளிலிருந்து முக்கியமான நிகழ்வுகள் வசனங்களில் கோர்த்து தரப்பட்டுள்ளன. இறைத்தூதர்களும் மனிதர்களே, அவர்களுக்கு இறைமைப் பண்போ, இறையாண்மையோ இம்மியளவும் இல்லை. அவர்களின் தேவைகளுக்கும் அல்லாஹ்விடமே கையேந்துபவர்களாக இருந்தார்கள். இறைத்தூதர்கள்மீது பல்வேறு பேரிடர்கள் வந்த பொழுது இறைவன் தரப்பில் இருந்து பேருதவி அளிக்கப்பட்டன. எல்லா இறைத்தூதர்களின் மார்க்கமும் நபிகளார் (ஸல்) அவர்கள் எடுத்துரைத்த மார்க்கமும் ஒன்றுதான். மனிதகுலத்தின் உண்மையான மார்க்கமும் அதுதான் என்ற கருத்துக்களை விளக்கும் வசனங்களுக்கும் அழகான விரிவுரைகளை பார்க்கலாம்.
அத்தியாயத்தின் முத்தாய்ப்பாக நபிகளார் (ஸல்) அவர்கள் மூலம் இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றுவதில்தான் மனிதனுக்கு நன்மை இருக்கிறது. மறுமையில் வெற்றியாளர்களாக திகழ முடியும் என்பதை உணர்த்தி முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் வருகை உலக மக்களுக்கு இறைவனின் தனிப்பெரும் அருளாகவும் கருணையாகவும்தாம் இருக்கின்றது என்று முடியும் வசனங்களுக்கும் சிறப்பான விரிவுரைகளை காணலாம்.
Be the first to rate this book.