6வது அத்தியாயம் அல் அன்ஆம் ஏகத்துவ இறைக் கொள்கையின் சிறப்பினை உள்ளங்களில் ஆழப்பதியும் வண்ணம் பல்வேறு சான்றுகள், உதாரணங்கள் மூலம் தெளிவுடன் எடுத்துரைக்கிறது. இணைவைப்பாளர்களின் வணக்கவழிபாடுகள், மூடக்கொள்கைகள், செயல்கள்
சுட்டிக்காட்டப்பட்டு அவை திருத்தப்படுவதற்கான வழிவகைகளும் எடுத்துரைக்கப்படுகிறது.
‘வானங்களையும், பூமியையும் படைத்து இருள்களையும், ஒளியையும் உருவாக்கியவனாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!' என்ற வசனத்தில் இருந்து தொடங்கும் விளக்க வுரைகள் ஏகத்துவத்தை எடுத்தியம்புவதாக இருக்கின்றன.
32வது வசனமான ‘உலக வாழ்க்கை என்பது விளையாட்டும் வேடிக்கையும் அன்றி வேறில்லை' என்ற
வசனத்திற்கு நீண்ட விளக்கத்தின் மூலம் மனிதனிடம் இருக்கும் தவறான கருத்துக்களைக் களைவதாக அமைந்துள்ளன.
33, 34 வசனங்களில் அல்லாஹ்வின் தூதர்களைப் பொய்யர்கள் என்று தூற்றியதுடன் அவர்களுக்கு இழைக்கப்-பட்ட துன்பங்களை அவர்கள் பொறுமையுடன் சகித்துக் கொண்டதைப் போல் அன்பு நபிகளார் (ஸல்) அவர்களும் பொறுமை காத்திட வேண்டுமெனும் வசனங்களுக்கு அளிக்கும் விளக்கங்கள் சத்தியப் பாதையில் பயணிக்கும் ஒவ்வொரு அடியாரும் வாழ்க்கையில் செயல்படுத்த பயனுள்ளவையாக இருக்கின்றன.
74 முதல் 82 வரையுள்ள வசனங்களில் நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் ஏகத்துவத் தேடலின் விளக்கவுரை
களைப் படிக்கும் பொழுது சத்தியத்தைப் புரிந்து வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துவதற்கு இலகுவாக உள்ளது.
இந்த அத்தியாயம் 165 வசனங்களைக் கொண்டதாயினும் ஏகத்துவத்தின் முக்கியத்துவத்தையும் சிறப்புகளையும் உலக மக்கள் உள்ளங்களில் ஆழமாகப் பதியும் வண்ணம் தெளிவுபடுத்தப்படுகிறது.
Be the first to rate this book.