இந்நூல் ஒன்பது தந்திரங்களாகப் பகுக்கப்பெற்றுள்ளது. ஏற்கனவே ஆறு தந்திரங்களுக்கு இருபகுதிகளாக உரைகள் வந்துள்ளன. முதல் தந்திரத்தில் வாழ்க்கைக்கு வேண்டிய இன்றியமையா அறங்களைக் கூறி, இரண்டாம் தந்திரத்தில் இறைவனது இயல்பும் பெருமையும் கூறி, அவனை அடைதற்குரிய யோகநெறிகளை மூன்றாம் தந்திரத்தில் விளக்கியுள்ளார். அடுத்து நான்காம் தந்திரத்தில் கிரியை முறையில் சக்கரங்களை வைத்து வழிபடும் முறைகளைக் காட்டி, ஐந்தாம் தந்திரத்தில் சமய பேதங்களைக் கூறிக் குறிநெறியே சிறந்த நெறியேன உறுதிப்படுத்தி, ஆறாம் தந்திரத்தில் குருநெறி என்ன என்பதையும், சிவனே குருவாக வருவான் என்பதையும் தொகுத்துக் காட்டிய பெருமை ஆசிரியப் பெருந்தகைக்கே உரியதாகும்.
Be the first to rate this book.