இந்த நூலில் திருக்குறளுக்கு மிகவும் எளிய நடையில் ஒரு புது முறையில் உரை சொல்லப்பட்டிருக்கிறது. பழைய உரைகளில் பல குறள்களுக்கு மிகவும் தவறாகச் செய்யப்பட்டுள்ள உரைகளுக்கு முற்றிலும் வேறுபட்ட புது உரைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. பத்து உரையாசிரியர்கள் எழுதிய பழைய உரைகளுக்குள் பரிமேலழகர் உரையே மிகச் சிறந்ததெனக் கொள்ளப்பட்டு, கடந்த அறுநூறு ஆண்டுகளுக்கு அதிகமாகப் பரிமேலழகர் மிகச்சிறந்த அறிஞர் என்பதில் ஐயமில்லை. ஆனால் திருவள்ளுவருடைய காலத்துக்குச் சுமார் (1400 ) ஆயிரத்து நானூற் ஆண்டுகளுக்குப் பின்னால் தோன்றிய பரிமேலழகர், திருவள்ளுவருடைய கருத்தையும், திருவள்ளுவர் காலத்தில் அரங்கேற்றப்பட்ட உரைகளையும் ஆராய்ந்தெழுத அவகாசமில்லாதவராகி, தம்முடைய காலத்தில் வழங்கிய உரைகளையும், அப்போதிருந்த சமூகப் பழக்கவழக்கச் சம்பிரதாயங்களையும் தழுவித் தம்முடைய உரையைச் செய்திருக்கிறார். பரிமேலழகருக்கு முன்னால் திருக்குறளுக்கு உரைகள் செய்திருந்த ஒன்பது பேர்களும் அவரவர்கள் மனம் போனபடி குறள்களின் வரிசைக் கிரமங்களை மாற்றிக்கொண்டு, வைப்புமுறையைச் சீர் கொடுத்திருந்தார்கள்.
Be the first to rate this book.