தமிழ்ப் பண்பாட்டுக் கருவூலத்தில் ஈடிணையற்றது திருக்குறள். இத்திருக்குறளை வேறெந்த தமிழ்க் குழுமத்தையும்விட, தமிழ் ஜைனர் கலந்தோறும் தமது அன்றாட சித்தாந்தப் பயில்வுக்குப் பயன்கொண்டு வந்தனர். இந்தப் பயன்கொள்ளலின் பெறுபேறு கவிராஜப்பண்டிதர் உரை. இந்த உரை, மற்ற எல்லா உரைகளையும்விட, திருக்குறளின் பொருளைக் கற்பாருக்குத் தெள்ளத்தெளிவாக உணர்த்தும் தன்மையுடையது. இப்படிப்பட்ட இவ்வுரையைப் பேராசிரியர் அ. சக்கரவர்த்தி 1949-ல் பதிப்பித்தார். இவ்வுரை அச்சில் வெளிவந்தும், பலருக்குக் கிடைப்பதற்கு அருமையுடையதாகவே இருந்துவந்தது; கடந்த எழுபது ஆண்டுகளில் ஒருமுறையேனும் மீளச்சு வரவில்லை. திருக்குறளைக் கற்போர் கைகளுக்கு இவ்வுரை கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த மீளச்சு.
திருக்குறள் என்னும் தமிழ்ப் பண்பாட்டுக் கருவூலத்தை இந்துத்துவம் தனதாக்கிக்கொள்ளத் திருதராட்டிர ஆலிங்கனம் செய்ய முயலுகிறது. இவ்வேளையில் இந்நூல் ஒவ்வொரு தமிழரிடம் இருக்க வேண்டியது அவசியம்.
Be the first to rate this book.