எளிமையின் அப்பிராணித் தோற்றத்தோடு, பற்றிப் படர்ந்து ஆழமாய் ஊடுருவி, நம்மைப் பாடாய்ப் படுத்திவிடுபவை வண்ணநிலவனின் எழுத்துக்கள்.
தமிழ்ச் சமூகம், அதுவரை எழுத்தின் வழியே அறிந்திராத சில பிரதேசங்களின்மீது வெளிச்சம் காட்டி, நம் பார்வைக்குத் தந்த கதைக் கலைஞன் அவர்.
நல்லவனும் கெட்டவனுமாய், ப்ரியமும் சிநேகிதமுமாய், வெம்மையும் வெறுமையுமாய், குரோதமும் வெறியுமாய், நவநவமாய் அவர் உலவவிட்ட பாத்திரங்களின் வழியே, அவர் சொல்லிச் சொல்லி தீராமல் சொல்வது அன்பெனும் மந்திரம் தவிர வேறேதுமில்லை.
தன்னை ஸ்தாபித்துக் கொள்ளும் கடுகளவு முனைப்புமின்றி, மொழிக்கு வளம் சேர்க்கும் பரீட்சார்த்த முயற்சிகளோடு, நெல்லை நாட்டு பாஷையின் சுகந்தத்தைக் கமழவிட்டபடி, புது வித புவிப்பரப்பில், ஞானியின் தேசாந்திரம் போல் தூரங்களைக் கடந்துகொண்டிருப்பவர் வண்ணநிலவன்.
Be the first to rate this book.