திருக்குறள் மதச் சார்பற்ற நூல். திருக்குறள் ஒரு குறிப்பிட்ட மொழி அல்லது ஓர் இனத்திற்கான நூல் என்று நாம் சுருக்கிப் பார்த்து விடக்கூடாது. தமிழில் எழுதப்பட்டிருந்தாலும், ஒரு தமிழரால் எழுதப்பட்டிருந்தாலும் அது தமிழர்களுக்கு மட்டுமே உரியதன்று. உலகெங்கும் வாழுகின்ற ஒட்டுமொத்த மனிதக் குலத்திற்கும் பொதுவானது என்பதுதான் இன்றைக்கு எல்லோராலும், நல்ல நோக்குள்ள அனைவராலும், மாந்த நேயப் பார்வையுள்ள அனைவராலும் வலியுறுத்தப்பட்டு வருகின்ற கருத்து. அது எப்படி என்பதை இந்நூலில் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார்.
தந்தை பெரியார் திருக்குறளை எப்படிப் பார்க்கிறார், பார்த்தார், மக்களிடத்திலே கொண்டு போய் சேர்க்க முயன்றார் என்பதையெல்லாம் மிகத்தெளிவாக முன் வைத்திருக்கிறார்.
-அறிவர் தொல்.திருமாவளவன்
Be the first to rate this book.