இந்த பாகத்தின் அத்தியாயங்கள் அனைத்தும் ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கிக் கிடந்து, புலனுணர்வுகளைச் செயல்பட விடாது அழுத்திக் கொண்டிருக்கும் அளவு போதை மயக்கத்தில் திளைத்திருந்து, கைகொட்டிச் சீட்டியடித்துக் கொண்டும் ஆடல் பாடல் கூத்து கும்மாளம் ஆகியவற்றில் ஆழ்ந்து கிடந்தது, இராக்கதைகள் பேசி வெட்டிப் பொழுது போக்கிக் கொண்டிருந்த ஒரு சமுதாயத்தை தட்டியெழுப்பிய முழக்கங்களாகவும், அத்தகைய மிருக உணர்வுகளின் மீது அடுக்கடுக்காய் தொடுக்கப்பட்ட உயர்ந்த வலிமை மிக்க தாக்குதல்களாகவும் திகழ்கின்றன.
மயக்கம் தீருங்கள்! விழித்தெழுங்கள்! திரும்பிப் பாருங்கள்! சிந்தியுங்கள்! எண்ணிப்பாருங்கள்! நிச்சயம் நீங்கள் வாழும் பிரபஞ்சத்திற்கு ஓர் இறைவன் உண்டு. அதற்கொரு நிர்வாகம் உண்டு. அதற்கொரு விதி உண்டு. இங்கே உங்கள் வாழ்வு ஒரு சோதனை. அதற்குக் கேள்வியும் கணக்குமுண்டு. பின்னர் அவற்றிற்கேற்ப கைமாறு உண்டு. பயங்கர வேதனையும்
மிகப்பெரும் நற்பேறுகளும் உண்டு. மயங்கியது போதும், தெளிவடையுங்கள். உறங்கியது போதும், விழித்தெழுங்கள். தீமைகளில் மூழ்கித் திளைத்தாது போதும். திரும்பிப் பாருங்கள். சிந்தியுங்கள். எண்ணிப் பாருங்கள்.
Be the first to rate this book.