பேராசிரியர் மனோன்மணியம் பெ.சுந்தரம்பிள்ளை அவர்கள் “தமிழ் இலக்கிய வரலாறு / திருஞானசம்பந்தர் காலம்” என்ற தலைப்பில் சென்னை கிறிஸ்துவ கல்லூரியின் ஆங்கில ஆய்வு இதழில் எழுதிய தொடர் கட்டுரைகளை பின்னர் 1895ஆம் ஆண்டு ஒரு நூலாக வெளியிட்டார். சில புகழ்பெற்ற ஐரோப்பிய அறிஞர்கள் தமிழ் இலக்கியங்களுக்கு அடிப்படை வடமொழி இலக்கியங்கள் என்றும், தமிழகத்தில் சைவ சமய மறுமலர்ச்சிக்காக குரல் கொடுத்த சமயக் குரவர்களில் முதன்மையானவருமான திருஞானசம்பந்தர் 13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்றும் கூறிய கருத்துக்களுக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் அமைந்துள்ளது இந்த ஆராய்ச்சி நூல்.
இந்நூலை, “திருஞானசம்பந்தர் காலம் ஓர் ஆராய்ச்சி” என்ற தலைப்பில் தமிழில் முறையான மொழியாக்கம் செய்து வெளியிடுகிறார் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையவர்களின் பேரனும், திருவனந்தபுரம் கேரளப் பல்கலைக்கழகத்தின் வேளாண்துறைப் பேராசியராகப் பணி-நிறைவு பெற்றவருமான பேராசிரியர் முனைவர் சு.மோதிலால் நேரு அவர்கள்.
Be the first to rate this book.