கையைப் பிடித்து மெதுவாய்க் கூட்டிப் போனான். பாதம் முழுக்க நசநசத்துப் பாறை நனைந்தது. வழுக்கியது. சுவரைப் பிடித்துக்கொண்டு நின்றாள். மேலே இன்னும் கழுகு பறந்து கொண்டிருந்தது. மலையின் சரிவு முழுக்க மரங்கள். எந்த மரம் அந்த வேங்கை? சரிவின் கோடியில் பூக்களால் பொலி யும் அந்த மரம். அதனடியில் தலைவிரிகோலமாய் ஒரு பெண். யாரவள்? முகம் பளிச்சிட்டுத் தெரிகிறது. இவளேதான். இவளே தான்... ‘பயமே வேண்டாம். தெகிரியமா ஒரு சுத்து வந்திரு போதும். கல்லு வவுறெல்லாங்கூட இந்த வேண்டுதலுக்கப்புறம் தொறந் திருக்குது.’ அவள் முகத்தில் இப்போது கண்ணீரில்லை. சிரிக்கிறாள். தலையைக் கோதிக்கொண்டே சிரிக்கிறாள். அண்ணாந்து வானத்தைப் பார்க்கிறாள். புஷ்பக விமானம் இறக்கை விரித்துக்- கொண்டு நிற்கிறது.
- நூலிலிருந்து...
Be the first to rate this book.