நவீனத்திற்குப் பிந்தைய தமிழ்க் கவிதை அடைந்திருக்கும் நெகிழ்வான பாய்ச்சலுக்கு ஒரு நற்சான்று திருச்சாழல். இப்படி ஒரு கவிஞன் தோன்றுவதற்காகத்தான் தொடர்ந்து மொழியில் விமர்சனங்களும் கவிதை தொடர்பான குறைகளும் அல்லற்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. வேறு எதற்காகவும் இல்லை.
கவியின் பன்மைத்தன்மையின் சுய வியாபகம் சூழ்ந்த மொழி, மனப்பரப்பின் மீது தனது பாய்ச்சலை நிகழ்த்தும்போது குறைகளுக்கு அவசியம் இல்லாமற் போகிறது. திருச்சாழல் தமிழ் கவிதைப்பரப்பில் கவிதை மீது நிகழ்ந்திருக்கும் மாயம்.
பன்முகத்தன்மையும், அனுபவமும், பகடியும் ஒரு கவிதை மொழியில் சஞ்சரிக்கும்போது என்ன நிகழ்கிறது? அது எவ்வண்ணம் உருமாற விளைகிறது? என்பனவற்றை அனுபவரீதியாக நம்மைக் கொண்டு நெருங்கித் தேற்றும் பிரவாகம் திருச்சாழல். ஒரு மொழியில் கவியின் பாத்திரம் என்ன என்பதை உணர்த்தும் அசல் கவியின் குரல்.
- லக்ஷ்மிமணிவண்ணன்
Be the first to rate this book.