1918ம் ஆண்டில் ருட்டி பெத்தித், முகமது அலி ஜின்னாவை ரகசியத் திருமணம் செய்து கொள்வதற்காகத் தன் தகப்பனாரின் மாளிகையிலிருந்து வெளியேறியதை அறிந்து, மொத்த சமூகமே அதிர்ந்தது; சீற்றமும் அடைந்தது. அவர்கள் இருவருக்குள்ளும் அத்தனை வேற்றுமைகள் - வேறு வேறு சமூகம்; வேறு வேறு மதம்; இருவருக்கும் 24 ஆண்டுகள் வயது வித்தியாசம். இது போன்ற மிக வித்தியாசமான ஓர் உறவுப் பின்னலை, ஷீலா ரெட்டி என்னும் புகழ் பெற்ற இதழியலாளர், இதுவரை வெளிவராத கடிதங்கள், நண்பர்கள் மற்றும் ஏனைய சம காலத்தினர் விட்டுச் சென்ற தகவல்கள், ஆவணங்களோடு பெரும் இரக்கமும் அக்கறையும் கலந்து வெளிக்கொணர்ந்துள்ளார். தில்லி, பம்பாய், கராச்சி போன்ற கதைமாந்தர்களின் வாழ்விடங்களில் ஆழமாகவும், மிக உன்னிப்பாகவும் ஆய்வுகள் மேற்கொண்டு ரெட்டி எழுதிய வாழ்க்கை வரலாறு இது.
Be the first to rate this book.