அதிவேகமாக முன்னகரும் இன்றைய உலகில் இரு தனி மனிதர்களிடையே மனம் விட்டுப் பேசும் தருணங்களும் அருகிவிட்டன. மனிதனுக்குள் அலைச்சலும் அமைதியின்மையும் கூடியபடியே இருக்கின்றன. உலகமயமும் நகரமயமும் அதிகரித்து வரும் இன்றைய நவீன உலகில் ஒவ்வொரு மனித மனமும் அகல விரிந்து தனித் திணையாகிறது. திரிந்தலையும் திணைகளாகிற மனித மனங்களை இருபதாண்டு சிங்கப்பூர் மாற்றங்களூடாக, குறிப்பாக செம்பவாங் வட்டாரத்தில் நிகழும் மாற்றங்களூடாகச் சொல்லி செல்கிறது இந்நாவல். பல்லினம், சமய நம்பிக்கைகள் கொள்ளும் பல்வேறு தேடல், புது நகரில் சந்திக்கும் அடையாளச் சிக்கல்கள், போன்றவற்றைச் சொல்லிச் செல்லும் இந்நாவல் இரண்டு பெண்களைப் பற்றியது.
Be the first to rate this book.