வாழ்க்கை முன்னேற்றத்துக்குத் தேவையான அனைத்து வசதிகளும் ஒரு மனிதனுக்கு கிடைத்துவிடுவதில்லை. அப்படி எல்லா வசதிகளும் இருந்தாலும்கூட நம்மை நோக்கிவரும் பிரச்னைகளும் மனக்குழப்பங்களும் வாழ்க்கை முன்னேற்றத்துக்கு பெரும் தடைகளாகவே இருக்கின்றன. சிலநேரங்களில், வழி தெரியாமல் சிக்கலில் மாட்டிக் கொண்டு, வாழ்க்கையை இழந்து விடுகின்றனர். சரி, இந்தச் சிக்கல்களுக்கு எப்படித் தீர்வு காண்பது..? இத்தகைய மனப் போராட்டங்களை எப்படி எதிர்கொள்வது..? குழப்பங்களுக்குத் தீர்வு என்ன..? எதிரிகளைச் சமாளிக்க என்ன வழி..? வெற்றி பெறுவதற்கான சூட்சமம் என்ன? இப்படி பல கேள்விகள்... உங்கள் மனசைத் திறந்து, உங்களிடமிருந்தே விடை தேடுகிறது இந்த நூல். சுயமுன்னேற்ற நூல்களில் கதாபாத்திரங்கள் மட்டுமே பேசும் உத்தியை, கேண்டிட் கேமரா பாணியில், நூலாசிரியர் ஃபஜிலா ஆஸாத் கையாண்டு இருப்பது தமிழுக்குப் புதுசு! வாழ்க்கை முன்னேற்றத்துக்கான அரிய கருத்துகள், நகைச்சுவை நடையில் சுவையான தகவல்கள், சிறந்த வழிகாட்டுதல்கள் நூல் முழுக்க இருக்கின்றன. ஒவ்வொரு கட்டுரையும், நாம் சந்தித்த அனுபவங்களோடு பின்னிப்பிணைந்து நமது பிரச்னைகளை ஆராயவைக்கிறது.
Be the first to rate this book.