1962 முதல் 1981 வரையில் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிப் பிரபலமான கவிஞர்களின் பாடல்கள், அவை இடம் பெற்ற படங்கள், பாடியவர்கள், இசையமைத்தவர்கள், மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை உட்பல பல தகவல்களைத் தொகுத்தளித்திருக்கிறார்.
கவிஞர்கள் தஞ்சைவாணன், பூவை செங்குட்டுவன், அவினாசி மணி, புலமைப்பித்தன், உளுந்தூர்ப்பேட்டை சண்முகம், நெல்லை அருள்மணி, காளிதாசன், முத்துலிங்கம், நேதாஜி, நா.காமராசன், கங்கை அமரன், சிதம்பரநாதன், பூங்குயிலன், காமகோடியான், இளையராஜா, டி.ராஜேந்தர், குருவிக்கரம்பை சண்முகம், மு.மேத்தா, பொன்னடியார் ஆகிய 19 கவிஞர்களின் வாழ்க்கைக் குறிப்புகள், அவர்கள் எழுதிய பாடல்கள் குறித்த விவரங்கள் இந்நூலில் ஆண்டு வரிசைப்படி விவரிக்கப்பட்டுள்ளன.
'திருமலை தென்குமரி' படத்தில் வரும் 'திருப்பதி மலை வாழும் வெங்கடேசா', 'மதுரை அரசாளும் மீனாட்சி' ஆகிய பாடல்களை எழுதிய உளுந்தூர்பேட்டை சண்முகம் பற்றியும் தகவல்கள் அருமை.
'திருவிளையாடல்' படத்தில் வரும் 'ஞானப் பழத்தைப் பிழிந்து' பாடலை எழுதிய சங்கரதாஸ் சுவாமிகள் பற்றியும், 'குடியிருந்த கோயில்' படத்தில் 'குங்குமப் பொட்டின் மங்கலம்' பாடலை எழுதிய ரோஷனாரா பேகம் பற்றியும் 'அரிய கவிகள்' பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. திரையிசை ஆர்வலர்கள் படித்துப் பாதுகாக்க வேண்டிய நூல்களில் ஒன்று.
Be the first to rate this book.