இலக்கியம் எப்போதுமே வாழ்வைக் குறித்தும், மனிதத்தைக் குறித்தும் காலாதீதமாகச் சென்று யோசிக்கக் கூடியது. காலத்தை உடைத்துப்போடும் வலிமை கொண்டது. காளிதாசனும் கம்பனும் பாரதியோடு நேரடியாக நெஞ்சுக்கு நெருக்கமானதெல்லாம் இலக்கியம் எனும் தொடர்பினால்தான். சினிமாவோ, புத்தகமோ எந்த ஊடகமாக இருந்தாலும் சரிதான், மிகத் தரமான விஷயங்கள், மிகத்தரமான கலைஞர்கள் ஊடாக வெளிவந்தபடியே இருக்கும். இது, கல்வெட்டு காலம் முதல் ஓலைச்சுவடி என்று தொடர்ந்து இன்று கையகல செல்போன் வரை தொடர்கின்றன. இலக்கியம் படைக்கும் மனம் மட்டுமே இங்கு முக்கியம். அப்படிப் படைக்கப்படுவதை உற்றுக் கவனித்து அதன் மூல ஊற்றுக்கண்ணைச் சுட்டும் ரசனையுடைய இலக்கிய மனப்பாங்கை உடையவராக திரு.சீ.ப.சீனிவாசன் அவர்கள் தெரிகிறார்.
கிருஷ்ணா
‘ஆன்மிகம்’
பொறுப்பாசிரியர்
Be the first to rate this book.