நகைச்சுவையை விரும்பாதவர்கள் பொதுவாக எவருமே இருக்க மாட்டார்கள். எனவே நகைச்சுவை எழுத்தாளர்களை, நிகழ்த்துக் கலைஞர்களை நாம் உடனே விரும்பத் துவங்கி விடுவோம். ஆனால் அவர்களுக்கு பொதுவானதொரு ஆபத்து இருக்கிறது. அந்தக் கணத்தில் நகைச்சுவையை சிரித்து ரசித்தாலும் பொதுச்சமூகத்திடமிருந்து சமூக மதிப்போ, அங்கீகாரமோ அவர்களுக்கு கிடைக்காது. மட்டுமல்ல அவர்கள் எல்லா சூழலிலும் நகைச்சுவையாளர்களாக மட்டுமே பார்க்கப்படுவார்கள். அவர்களின் தனிப்பட்ட வேறுமுகமோ அல்லது தீவிரமான கருத்துகளுமோ கூட நகைச்சுவையாகவே பார்க்கப்படும் அல்லது இடது கையால் சிரிப்புடன் நிராகரிக்கப்படும்.
Be the first to rate this book.