இந்த நூலில், 1932ம் ஆண்டு முதல், இன்று வரை தமிழ் திரைப்படக் கதைகளில் பயன்படுத்தப்பட்ட நாவல்கள், நாடகங்களை பற்றி அரும்பாடுபட்டு தகவல்கள் பலவற்றை தொகுத்து தந்திருக்கிறார் ஆசிரியர். நூற்றுக்கணக்கான வெற்றிப்படங்களை உருவாக்க நாவல்களும், நாடகங்களும் அடிப்படை காரணமாக அமைந்திருக்கின்றன.
கடந்த, 1932ம் ஆண்டு, ‘காலவா’ என்ற திரைப்படம் வெளிவந்தது. முழுமையாக தமிழ் பேசிய முதல் திரைப்படம் இதுதான். அது, பம்மல் சம்பந்த முதலியாரின், ‘காலவலஷி’ என்ற நாடகத்தை அடிப்படையாக கொண்டது என்று துவங்கி, 2013ம் ஆண்டில் தங்கர்பச்சன் எழுதிய, ‘அம்மாவின் கைப்பேசி’ நாவல் திரைப்படமானது என்று முடிக்கிறார்.
கடந்த, 1970ம் ஆண்டில், ‘ஷேக்ஸ்பியரின், ‘ஆலிவர் டுவிஸ்ட்’ எனும் நாடகத்தைத் தழுவி தமிழில், ‘அனாதை ஆனந்தன்’ (பக். 58) என்ற திரைப்படத்தை தயாரித்தனர்’ என, குறிப்பிடப்பட்டுள்ளது. ‘ஆலிவர் டுவிஸ்ட்’ என்பது நாவல்; அதை எழுதியவர், சார்லஸ் டிக்கன்ஸ்.
Be the first to rate this book.