திரைப்படங்களில் உள்ள ஒவ்வொரு ஜானரின் அடிப்படையில் எப்படி திரைக்கதை எழுதுவது? என்பதில் துவங்கி, எழுதிய திரைக்கதையை எப்படி விற்பது? ஆய்வு செய்வது? என்பதுவரை, உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கின்றன.
திரைக்கதை எழுதுதல் சார்ந்து வெளியாகியிருக்கிற சிறந்த புத்தகங்கள் அனைத்தையும் உங்களால் ஒரே இரவில் படித்துவிட முடியாது. ஆனால், இந்நூல் அதற்கான சாத்தியத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில், அத்தகைய சிறந்த புத்தகங்களில் சொல்லப்பட்டிருக்கிற சிறந்த கருத்துக்களைத் தொகுத்துதான், இப்புத்தகம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
திரைக்கதை குறித்த அறிமுகத்தை மட்டும் தராமல் இன்னும் அதனை ஆழமாக அணுகுகிறது. திரைக்கதை எழுதுபவர்களுக்குத் தேவையான கருவிகளை இந்தப் புத்தகம் வழங்குகிறது. கதையின் பல்வேறு வகைமாதிரிகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இதில், திரைக்கதை எழுதும்பொழுது உங்களுக்கு உதவக்கூடிய அட்டவணைகள் மற்றும் பணித்தாள்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஒரு திரைக்கதை எழுத்தாளராக, உங்கள் சொந்தத் திரைக்கதையின் ‘plot points’ மற்றும் ’கதாபாத்திர குணாதிசய தகவல்’ போன்றவற்றை வெளிக்கொணர்வதற்குத் தேவையான முறைகளை இது கற்றுத்தருகிறது.
திரைக்கதை எழுதுவதற்கு நீங்கள் புதியவராக இருந்தாலும், ஏற்கனவே பல திரைக்கதைகள் எழுதி பழுத்த அனுபவம் பெற்றவராகயிருந்தாலும், இந்தப் புத்தகம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Be the first to rate this book.