நான் அடிக்கடி சொல்வதுபோல, திரைக்கதை எழுதுதல் என்பது ஒரு மிகப்பெரிய சமுத்திரத்தை ஆராய்ந்து அளப்பது போன்றது. அது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவத்தை வழங்கும். ஒவ்வொருவருக்கும் திரைக்கதை எழுதும் கலை ஒவ்வொரு வடிவில் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும். எனவே, திரைக்கதை எழுதுவதற்கு ‘இது இப்படித்தான்’ என்ற குறிப்பான வழிமுறை இல்லை. இருப்பினும், வணிக சினிமா என்பதை எடுத்துக்கொண்டால் உலகம் முழுதும் என்னென்ன வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன என்பதை, சிட் ஃபீல்டின் வழிமுறைகளை வைத்துக்கொண்டு இதில் எழுதியிருப்பது, திரைக்கதை கற்றுக்கொள்ள நினைக்கும் ஆர்வலர்களுக்கு முதலில் ஒரு துவக்கத்தை ஏற்படுத்திக்கொடுக்கவே. இப்புத்தகத்தைப் படித்தபின், திரைக்கதை வடிவம் ஓரளவு புரிந்தபின்னர், இந்தப் புத்தகத்தை ஒட்டுமொத்தமாகக் கூட நீங்கள் நிராகரிக்கலாம். அதில் தவறே இல்லை.
- 'கருந்தேள்' ராஜேஷ்
Be the first to rate this book.