ராஜேஷ் என்ற பெயரில் இந்தப் புத்தகத்தை எழுதிய ‘கருந்தேள்’ ராஜேஷ், ஒரு திரை விமர்சகர். கடந்த ஐந்து வருடங்களாகப் பல்வேறு வகையான திரைப்படங்களைப் பற்றி தன் வலைத்தளத்தில் விரிவாக எழுதிவருகிறார். இவர், தமிழ்த் திரைப்படங்களில் திரைக்கதைகளைச் செப்பனிட்டுக் கொடுக்கும் Screenplay consultant. திரைக்கதை பற்றிய வகுப்புகளைத் திரைப்படக் கல்லூரிகளில் எடுப்பது, தனது ப்ளேஸ்டேஷன் 3ல் இரவு பகலாக கேம்களை விளையாடித் தள்ளுவது, பல்வேறு படங்களைப் பார்ப்பது, அவற்றைப் பற்றி எழுதுவது, மொழிபெயர்ப்பு ஆகியவை இவருக்கு மிகவும் பிடித்தமானவை. பெங்களூரில் வசித்து வருகிறார்.
ஸிட் ஃபீல்டின் திரைக்கதை விதிகளை ஆராய்ந்து இவர் எழுதியிருக்கும் இந்தப் புத்தகம், எப்போதோ வந்த தமிழ்ப்படங்களில் தொடங்கி, புதிய தமிழ்ப் படங்கள் வரை பல்வேறு களன்களில் அமைந்த திரைக்கதைகளை விரிவாக அலசுகிறது. படிப்பவர்களுக்கு எளிதில் புரியும்படி அமைந்த இந்தப் புத்தகம், திரைக்கதை ஆர்வலர்களுக்கு அவசியம் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு எழுதப்பட்டிருக்கிறது. ‘தினகரன் வெள்ளிமலர்’ இணைப்பிதழில் ஒரு வருடத்துக்கும் மேலாக வெளிவந்து, பரவலான வரவேற்பைப் பெற்ற தொடர் இப்போது நூலாக வெளிவந்திருக்கிறது.
Be the first to rate this book.