'ஆணா பெண்ணா என்றால் ஆண். கறுப்பா சிவப்பா என்றால் சிவப்பு. ஒரு பெண்ணாகவும் இருந்து அதுவும் அவள் கறுப்பாகவும் இருந்துவிட்டால்? அப்படிப்பட்ட ஒரு பெண்ணின் உணர்ச்சிப்பூர்வமான போராட்டத்தைதான் இ.பா. இந்நாவலில் அழுத்தமாக பதிவு செய்துள்ளார். மேலோட்டமாக பார்த்தால் இது ஒரு நாவல் மட்டுமே. ஆனால் யாரும் இதனை மேலோட்டமாக பார்க்கவில்லை.
1971-ல் தினமணி கதிரில் இதே நாவல் ஒரு தொடராக வெளிவந்தபோது ஏகப்பட்ட எதிர்ப்புகள், கண்டனங்கள். விளைவு? தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. திரைகளுக்கு அப்பால் பொதிந்துகிடக்கும் நிதர்சனங்களை கண்ணோடு கண் பொருத்தி காண யாருக்குத்தான் துணிவு இருக்கும்?
Be the first to rate this book.