உலகின் தலைசிறந்த பத்து நாவல்களில் ஒன்றாகக் கருதப்படும் மோபி டிக் முதன்முதலாகத் தற்போது தமிழில் திமிங்கில வேட்டையாக வெளிவந்துள்ளது.1851ல் வெளியான இந்த நாவல், இப்போதும் அமெரிக்காவின் இலக்கியப் பொக்கிஷங்களில் ஒன்றாக மதிக்கப்படுகிறது. ஹெர்மன் மெல்விலின் மிகப்பிரம்மாண்டமான மோபி டிக் நாவலை தமிழில் திமிங்கில வேட்டை என்ற பெயரில் சுருக்கப்பட்ட வடிவமாக – அதே சமயம் அதன் விறு விறுப்பு சற்றும் குறையாமல் தந்திருக்கிறார் எழுத்தாளர் மோகனரூபன்.ஹெர்மன் மெவில் கடற்பயணங்களை பற்றி எழுதுவதில் கைதேர்ந்தவர்.
இயற்கையை வெல்ல மனிதன் தொடர்ந்து போராடுகிறான் . இயற்கையே இன்றும் என்றும் வல்லமை மிக்கது . இதுவே இந்நாவலின் செய்தி.
ஜான் ஹட்சன் (John Huston) இதனை Moby Dick (1956) என்ற பெயரில் திரைப்படமாக இயக்கியுள்ளார்.
Be the first to rate this book.