கே.பாலமுருகனின் இச்சிறுகதைகள் மலேசிய வாழ்வின் பாடுகளின் ஊடாகப் பயணிக்கின்றன. கலையின் தலையாய பணி துயரத்தைப் பாடுவதெனில் இக்கதைகளும் துயரத்தையே பாடுகின்றன. துயர நதியைக் கடக்காமல் துயரத்தைக் கடக்க முடியாதென உறுதியாக நம்பும் பாலமுருகன் நம்முன் கதைகளின் வாயிலாக துன்பவியல் நாடகங்களை நிகழ்த்துகிறார். இச்சிறுகதைகளின் கதைமாந்தர்கள் மலேசிய நிலப்பரப்பின் அடையாளங்களாக விரிகிறார்கள். இவரின் முந்தைய கதைகளிலிருந்து கூடுதலாக மலேசிய மண்ணையும் மனிதர்களையும் நோக்கி இச்சிறுகதைகள் விரிவடைகின்றன.
- எழுத்தாளர் சாம்ராஜ்
Be the first to rate this book.