கலை, கலாசாரம், அரசியல், வரலாறு, பூகோள ரீதியாக உலக வரலாற்றில் இந்தியா பெற்றிருக்கும் இடம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதற்குக் காரணம் - மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் மக்களைக் காத்த அரசர்களும், இந்திய சுதந்திரத்துக்குப் போராடிய காலத்தில் மக்களை வழிநடத்திச் சென்ற தலைவர்களும்தான்! ஒரு நாட்டுக்கும் சரி, ஒரு நிறுவனத்துக்கும் சரி... அதன் தலைவர்களாக இருப்பவர்கள், பிரச்னைகளை எவ்வாறெல்லாம் எதிர்கொண்டு வெற்றி பெறுகிறார்கள் என்பதை இன்றைய இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம். சவால்களைச் சந்திக்கும் வலிமையையும், அறிவையும் பெற்று தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்வது எப்படி என்பதை விரிவாக விளக்குகிறது, இந்த நூல். காந்தி, நேரு, படேல், பெரியார், அண்ணா, காமராஜர்... இப்படி, மக்கள் நலனுக்காக செயல்களில் உறுதியாக இருந்து, கடமை உணர்வுடன் செயல்பட்ட ஒவ்வொருவரும் தலைமை இடத்துக்கு எப்படி வந்தார்கள் என்பதை சுவையான சம்பவங்களோடு விவரிக்கிறார், நூலாசிரியர். தலைமைப் பண்பு வளர... மாநிலங்கள், நீதிமன்றங்கள், பாராளுமன்றம், சட்டமன்றம் ஆகியற்றின் இயக்கம் பற்றியும், தொன்மையான மக்கள் வரலாறு முதல், நவீன கல்விமுறை மாற்றம் வரை இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை கேள்வி-பதில் பாணியில், உற்சாகம் ஊட்டும் விதத்தில் எழுதியிருக்கிறார் நூலாசிரியர் வேங்கடம். இந்த நவீன அர்த்தசாஸ்திரத்தை, இளைஞர்கள் மட்டுமல்ல, பல்வேறு துறைகளைச் சார்ந்த நிறுவன ஊழியர்கள், அரசியல் ஆர்வலர்கள், பொது நலன் விரும்பும் சேவகர்கள் அனைவரும் படித்துப் பாதுகாக்க வேண்டிய நூல்.
Be the first to rate this book.