வண்ண கோலப்பொடி கன்னத்தில் அப்பியிருக்க.... போட்டு முடித்தக் கோலத்திற்கு நடுவே பூசணிப்பூவை வைத்துவிட்டு விரல்நுனிளால் தமது இளஞ்சிவப்பு கீழுதட்டைத் திருகியபடி கோலத்தை நோட்டமிடும் அந்த மார்கழி மாத விடியற்காலை தேவதைகள்....
கொலுவுக்குச் சென்ற வீட்டில் உள்ளங்கையில் சீடையை வைத்துவிட்டு கண்ணாடி வளையல்கள் கலகலக்க ஒரு வெட்கப் பார்வையும் உள்ளறைக்குள் மறைந்த அந்த நவராத்திரி தேவதைகள்...
கோயில் நெய்விளக்குகளின் வெளிச்சம் முகத்தில் பிரகாசிக்க நெருப்பின் வெக்கையால் துளிர்த்த வியர்வையில் நெற்றிக் குங்குமம் கரையக் கரைய பட்டுப்பாவாடை தாவணியில் விளக்கேற்றும் பெரிய கார்த்திகை தேவதைகள்.. எத்தனை எத்தனை தேவதைகள்.. நாம் கடந்து வந்த நம்மைக் கடந்துச் சென்ற சில தேவதையின் கதைகள்.
Be the first to rate this book.