தேசிய மற்றும் காலனிய பிரச்சனைகள் குறித்துமார்க்ஸ் எங்கல்ஸ் எழுதிய கட்டுரைகளிலிருந்து சிறந்த கட்டுரைகளை தேர்வு செய்து முன்னுரையுடன் தந்துள்ளார் மார்க்சிய அறிஞர் அய்ஜாஸ் அகமது. அப்பணசாமியின் சிறந்த மொழிபெயர்ப்பில் பாரதி புத்தகாலயம் கிடைக்கிறது.
தேசிய இனப் பிரச்சனையை முன்னெடுக்கும் பலரது புரிதல்களுக்கும் தேசிய இனப் பிரச்சனைக்கும் முதலாளியத்தின் வளர்ச்சி, வர்க்க அரசியல், நில உடைமைத்துவப் பிற்போக்கு சக்திகளின் வீழ்ச்சி ஆகியவற்றுக்கும் தொடர்பு கிடையாது என்பதாகத்தானே இருக்கிறது. ஆனால் இப்புத்தகத்தின் உள்ளடக்கம் புரியப் புரிய மார்க்சிய மூலவர்களின் சுவாசம் முழுவதிலும் வர்க்க அரசியல் வியாபித்துள்ளதைக் கண்டு பிரமிக்கத்தான் முடிந்தது. தேசியம் ஆனால் என்ன? காலனியப் பிரச்சனைகள் ஆனால் என்ன? எதைத்தான் வர்க்க அரசியலில் இருந்து பிரித்து வைத்துவிட முடியும்?! மானுடச் செயல்பாடுகள் அனைத்தும் வர்க்க அரசியல் ஊடாகவே பார்க்கப்பட வேண்டும் என்கிற புரிதல் கிடைக்கிறது இந்நூலிலிருந்து.
Be the first to rate this book.