ஆதியும் அந்தமுமான அந்த இறைவனைப் பாடியது திருவாசகம். வீதியே சொந்தமென்று கிடக்கிற சாமான்யர்களுக்கானது இந்த தெருவாசகம். எங்கோ தூரக் கரைகளில் பொறுக்கப்படாமல் கிடக்கிற கிளிஞ்சல்களைப் போல இன்னும் எழுதப்படாமல் இருக்கிற மனிதர்களைப் பற்றிய பதிவு இது. நமக்காக கறைகளைத் துடைப்பவர்கள்; நமக்காக சுமைகளைச் சுமப்பவர்கள்; நமக்காக நாற்றத்தைச் சுவாசிப்பவர்கள்தான் இந்தக் கவிதைகளின் நாயகர்கள். தினம்தினம் நாம் தரிசிக்கிற சக மனிதர்கள்தான். ஆனால், ஒரு சிக்னலில் காத்திருக்கிற இடைவெளியில்கூட இவர்களைப் பற்றி நாம் சிந்தித்திருப்போமா என்பது சந்தேகம். ஊர் தூங்கிய பிறகு விழித்திருக்கும் நிலவைப் பற்றி எத்தனையோ கவிதைகள்... நிலவோடு சேர்ந்து நித்திரை தொலைக்கும் கூர்க்காவைப் பற்றி யார் யோசித்தோம்? கோயில் வாசலில் மஞ்சள் வெயில் உதிரஉதிர பூத்தொடுக்கும் சிறுமியின் ஏக்கம் தெய்வத்துக்காவது தெரியுமா?
Be the first to rate this book.