வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்ட பல்வேறு இதழ்களில் வெளிவந்த சிறுகதைகளில் குறிப்பிடத்தக்க சிலவற்றின் தொகுப்பு நூல். வித்தியாசமான ஆளுமைகளைக் கொண்ட மனந்தொட்ட மனிதர்களைப் பேசும் இக்கதைகளை ந. முருகேசபாண்டியன் தேர்ந்தெடுத்துத் தொகுத்துள்ளார். ஆணவம், அதிகாரம், வன்முறை போன்றன கட்டமைக்கிற வாழ்தல் முறையைப் படைப்புகளின் வழியாகத் தகர்த்து மனித இருப்பின் உயர்வு குறித்து அக்கறைகொள்வது என்பது இக்கதைகளில் இயற்கையாகவே இருக்கிறது. பண்டைய தமிழிலக்கியத்தின் தொடர்ச்சியாக அறச்சீற்றமும், சிறுமை கண்டு பொங்குகிற மனிதன் ஆவேசமும் இத்தொகுப்பிலுள்ள புனைக்கதைகளின் வழியாக வெளிப்படுகின்றன.
Be the first to rate this book.